நான் படித்து என் நினைவில் உள்ள சில கவிதைகளை கீழே தொகுத்துள்ளேன். இவற்றை யார் எழுதினார்கள் என்பது நினைவில் இல்லை.
--------------
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னை காட்டி என்னிடம் கேட்டது -
'ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?'
என்று!
--------------
என் மனம் உன்னிடம் உள்ளபோதும்
ஏன் என்னை பற்றி உனக்கு புரியவில்லை?
--------------
விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்ந்தேன்
தூண்டிலின் ரணம் என்னவென்று!
--------------
எனக்கு தெரியும் நீ விரும்புவது என்னை அல்ல
என் கவிதையை என்று.
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல
நான் தான் என்று?

These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati