விடியலில் விழிகளிரண்டும் முதலில்,
காண துடிப்பது அவளைத்தான்

அவளை கண்டுவிட்டலோ,
உள்ளத்தில் உற்சாகம் பெருகிடுமே!

அவளின் கனிவான பார்வை,
மனதினை பனியென உருகிட செய்திடும்

மாலையில் களைப்புடன் வந்தாலோ,
அவளின் மந்திரப்புன்னகையில் சோர்வும் மயங்கிடுமே!

அவளின் குறும்புத்தனத்தை கண்டு,
கோபம் ஒன்றும் வந்திடாது

அவள் என் தோள் மீது சாய்ந்து தூங்குகையில்
என் மனம் நிம்மதி அடைந்திடுமே!

என்னுலகை வண்ணமாக்குகிறவள்
என் செல்ல மகள்!

These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati