நாம் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியையும் நாம் அறியாமலே நம் மனது பதிவு செய்து கொள்ளும், ஆனால் அதில் ஒரு சில நிகழ்வுகள் மட்டுமே எப்போதும் நம் மனதில் தங்கிப்போகும். அப்படி பதிந்துபோன நிகழ்வுகள் நடந்த நாட்கள் வந்தாலோ, மீண்டும் ஒரு முறை அந்த நொடியில் நாம் வாழ்ந்துவிட்டு திரும்புவோம்!

"நான் எதையுமே நினைவில் வைத்துக்கொள்வதில்லை" என்று சொல்பவர்கள்கூட கண்டிப்பாக நினைவுகளை சுமந்தவர்களே!

எனக்கு நினைவுகளெல்லாம் ஒரு வீடியோ கேமராவில் பதிவு செய்தது போல் ஞாபகம் இருக்கும். இன்னும் சொல்லவேண்டுமெனில் அப்படி பதிவு செய்ததெல்லாம் ஒரு அறையில் உள்ள சிறு சிறு பெட்டகங்களில் சேமிப்பது போலவும், அதை எடுத்து மனத்திரையில் ஓடவிடுவது போலவும் தோன்றும்!

குளத்தில் கல் எறிந்தால் எப்படி அலைகள் உருவாகுமோ அது போல சில தருணங்களில் ஒரு சில நினைவுகள் அதை சார்ந்த பல்வேறு நினைவுகளை தோற்றுவிக்கும்!

என்னை பொறுத்தவரை கடினமான காலங்களிலும், தனிமையான தருணங்களிலும், இனிமையான நினைவுகளே இதமளிக்கும்!

என்ன நீங்களும் நினைவலைகளில் மூழ்கி விட்டீர்களா?

These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati