கடந்த சில நாட்களாக மழை பின்னி பெடல் எடுத்துக்கொண்டிருக்கிறது. நம் ஊரில் எப்பொழுதுமே வெப்பமாக இருப்பதால் மழையை கண்டாலே சந்தோஷம் தான்! அதுவும் மழையில் நனைவதேன்பது அதைவிட சந்தோஷம்! சமீபத்தில் மாரத்தான் ஒன்றில் கலந்துகொண்டபொழுது திடீரென்று மழை பொழிய தொடங்கிவிட்டது! அந்த மழையில் ஓடியது ஒரு அருமையான அனுபவம்! (பதிவு)
மழையை பற்றி பேசிக்கொண்டிருப்பதால், சில பாடல்கள் மனதில் தோன்றின, அவை கீழே!
1. சின்ன சின்ன மழைத்துளிகள் - என் சுவாசகாற்றே (1999)
பாடியவர்: எம். ஜி. ஸ்ரீகுமார்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்
சிறு சிறு துளிகளாக மழை துடங்கும் பொழுது, இந்த பாடல் தான் ஞாபகம் வரும். பாடலை மட்டும் ரசிப்பது நலம், அரவிந்த்சாமின் ஆட்டத்தை மன்னித்து மறப்போமாக! இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்
"சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்
என் கண் விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்"
2. ஆலங்கட்டி மழை - தெனாலி (1999)
பாடியவர்கள்: கமல்ஹாசன், சுஜாதா, ஸ்ரீநிவாஸ்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்
சிறு வயதில் மழை நேரத்தில் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து, அம்மா சமைக்கும் சூடான உணவை உண்பதே ஒரு அலாதியான அனுபவம் தான். இப்பாடலும், ஆரம்பத்தில் வரும் பாடல் காட்சியும் அதை நினைவுபடுத்துகிறது!
3. வான் மேகம் - புன்னகை மன்னன் (1986)
பாடியவர்: சித்ரா
இசை: இளையராஜா
புன்னகை மன்னனில் வரும் இந்த பாடலும், மௌன ராகம் படத்தில் வரும் ஓஹோ மேகம் வந்ததோ பாடலும் ஒரே மாதிரி இருக்கும். அந்த பாடலிலும் மழை + ரேவதி + சித்ரா + இளையராஜா கூட்டணியே, எனினும் இந்த வான் மேகம் பாடல் தான் விருப்பமானது.
4. ஒரு பூ எழுதும் கவிதை - பூவேலி (1998)
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சித்ரா
இசை: பரத்வாஜ்
ஒரு காலத்தில் கார்த்திக் நடித்து வரிசையாக பல படங்கள் வந்தன, அதில் இதுவும் ஒன்று! இப்பாடலில் மிகவும் பிடித்த வரி "நதி நீர் எழுதும் கவிதை, அலை ஓவியமாய் விரியும்", இதை கேட்டால் குளத்தில் கல் எறிந்தால் ஏற்படும் அலை தான் நினைவுக்கு வரும்!
5. சின்ன சின்ன தூறல் என்ன - செந்தமிழ் பாட்டு (1992)
பாடியவர்: எஸ். பி. பீ
இசை: இளையராஜா
எஸ். பி. பீ-யின் இனிமையான குரலில் ஒரு அருமையான பாட்டு!
கொசுறு:
புது வெள்ளை மழை - ரோஜா
About the blog
The obvious question – Why this name? And what does it mean?
Well, I wanted the name to be unique as well as a bit creative.
ea·sel (spelled as ee-zuhl) means a frame or stand that's used for supporting or displaying an artist's canvas. And since, the blog is going to be a place wherein I could express my thoughts, it’s acting as an easel in digital format - Hence, Digital Easel!!
Well, I wanted the name to be unique as well as a bit creative.
ea·sel (spelled as ee-zuhl) means a frame or stand that's used for supporting or displaying an artist's canvas. And since, the blog is going to be a place wherein I could express my thoughts, it’s acting as an easel in digital format - Hence, Digital Easel!!
~ amuthan
"Life is something that happens to you, while you are busy making other plans!"
Archives
Recent Comments
Categories
- 080808 (2)
- Ad (4)
- Creative (2)
- Cricket (2)
- Deepavali (1)
- Environment (1)
- Exercise (1)
- Fitness (1)
- Foods (1)
- Formula 1 (2)
- Fun (2)
- Game (1)
- Health (1)
- Hindi (3)
- Hope (2)
- Independence Day (1)
- Inspiration (3)
- Japanese (1)
- Language (8)
- Magazines (1)
- Marathon (1)
- Memory Lane (5)
- Michael Jackson (1)
- MJ (2)
- Moon landing (1)
- Movie (7)
- Music (8)
- My creations (2)
- Nature (1)
- Olympics (1)
- Rain (1)
- Rant (1)
- Slamball (1)
- Sports (8)
- Story (1)
- Tamil (4)
- Tech Stuff (2)
- Tennis (1)
- The Beginning (1)
- Toys (1)
- Wallpaper (1)
- கவிதை (5)
- நினைவுகள் (1)











One comment
Comment by கோபிநாத் on 1:29 PM
யப்பா...!!! மழையை பத்தி பாட்டு போட்டு கலக்கிட மாப்பி ;))
மழைன்னு ஒரு படம் இருக்கு...தயவு செய்து பார்த்துடாதே! ;-)
Post a Comment